Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எம்.சி.சியிலிருந்து நாட்டை மீட்ட பெருமை ஜனாதிபதியை சாரும்

December 23, 2020
in News, Politics, World
0

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தையே சாரும்,நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த 48 கோடி டொலர் நிதியுதவியை கண்ணிவெடி என்றே குறிப்பிட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு எம்.சி.சி ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆட்சிக்கு வர முன்னரே நாம் குறிப்பிட்டோம்.

எம்.சி.சி. ஒப்பந்தம் போக்குவரத்து அபிவிருத்தி மற்றும் காணி முகாமைத்துவ விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு விடயங்களிலும் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை இரகசியமான முறையில் கைச்சாத்திட தீர்மானித்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் மறைக்கப்பட்டன.

ஆங்கில மொழியில் இருந்த எம்.சி.சி ஒப்பந்தத்தை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்து பல விடயங்களைப் பகிரங்கப்படுத்தினோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதற்கேற்ப எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட நாம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

கண்னி வெடி என்று கருதப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த அரசாங்கத்தையே சேரும். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தத்தில் எமது அரசாங்கம் எக்காலத்திலும் கைச்சாத்திடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க ஒருவாரம் காலக்கெடு

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures