Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எம்மை நாமே ஆளும் அரசியல் யாப்பு ஒன்றே எமக்குத் தேவை – விக்னேஸ்வரன் அதிரடி

August 6, 2016
in News, Politics
0
எம்மை நாமே ஆளும் அரசியல் யாப்பு ஒன்றே எமக்குத் தேவை – விக்னேஸ்வரன் அதிரடி

எம்மை நாமே ஆளும் அரசியல் யாப்பு ஒன்றே எமக்குத் தேவை – விக்னேஸ்வரன் அதிரடி

xxx

வடமாகாணத்தில் சமாதானத்திற்கான சூழல் உருவாக்கப்படாமலேயே நல்லிணக்கம், சமாதானத்திற்காக பல நடவடிக்கைகளை அரசு தான்தோன்றித்தனமாக எடுக்கின்றது. ஆனால் நல்லிணக்கம், சமாதானம் உருவாக வேண்டுமானால் முதலில் ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ், இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தளவில் சர்வதேச நாடுகள் உதவியாக இருக்க முடியுமென்பதனை அறிந்து கொள்ள வருகை தந்திருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உருவாக்க தான்தோன்றித்தனமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. உண்மையில்இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் உருவாக்கப்பட வேண்டுமானால், முதலில் அதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான சூழல் வடக்கில் இன்றுவரைஉருவாக்கப்பட்டிருக்கவில்லை.

வடக்கில் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டிருக்கின்றனர், மக்களுடைய நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கின்றார்கள், மக்களுடைய நிலத்தில் படையினர்விவசாயம் செய்கிறார்கள், கடற்றொழில் செய்கிறார்கள், மக்களோ நலன்புரி நிலையங்களில் பொருளாதார வளம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சூழலே வடக்கில் காணப்படுகின்றது.

உதாரணமாக தென்னாபிரிக்காவில் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு உருவாக்கப்பட முன்னதாகவே அந்த நாட்டில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நல்லிணக்கத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

மேலும் அரசியலமைப்பு ஊடாக மாற்றத்தை உண்டாக்க முடியுமா என என்னிடம் கேள்வி கேட்டார்கள், அதற்கு, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான யோசனைகளை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். அதில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

மேலும், சுயாட்சி அடிப்படையில் நீங்கள் தீர்வை எட்ட முடியாதா என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேள்வி யெழுப்பியதாகவும், எதுவாக இருந்தாலும் நாங்கள் எதிர்பார்ப்பது எங்களை நாங்களே நிர்வாகிக்க கூடிய ஒரு ஆட்சிமுறையே என்பதை சுட்டிக்காட்டினேன்.

Tags: Featured
Previous Post

iPhone 7 கைப்பேசியின் பிரதான நினைவகம் எவ்வளவு தெரியுமா?

Next Post

வெல்லப்போவது யார்? Scarborough-Rouge River தொகுதியின் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

Next Post
வெல்லப்போவது யார்? Scarborough-Rouge River தொகுதியின் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

வெல்லப்போவது யார்? Scarborough-Rouge River தொகுதியின் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures