பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், தற்போது மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் என்கிற படத்தின் கதை உருவாக்கத்திலும், வசனத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தப்படம் மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரபல நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. சமீபத்தில் இந்த படம் டொரண்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது..
அந்த நிகழ்வில் பேசிய அனுராக் காஷ்யப், இயக்குனர் கீது மோகன்தாஸ் என்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டார் என ஜாலியாக குற்றம் சாட்டினார்.
ராஜீவ் ரவி அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் அதேசமயம் ராஜீவ் ரவி கீது மோகன்தாஸின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.