தன்னிடம் இரண்டு நிலைப்பாடுகள் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ. தே. மு. வில் வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படாவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் அப்படி எண்ண வேண்டும். என்னிடம் இரண்டு நிலைப்பாடு கிடையாது ஒரே நிலைப்பாடுதானுண்டு.
நிச்சயமாக நான் தெரிவு செய்யப்படுவேன். அந்த நம்பிக்கையுடனே முன்வந்துள்ளேன். உங்கள் கேள்விக்கு ஒரு பதில்தான் இரண்டு கிடையாது எனக் கூறியுள்ளார்.
செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் உங்களுக்குப் பூரண ஆதரவு வழங்கும் என நம்புகின்றீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு நிச்சயமாக என அமைச்சர் சஜித் பதிலளித்துள்ளார்.
நான் போட்டியிடப் பொவதாக எப்போதோ அறிவித்துவிட்டேன். வேறு யாரும் இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்க விலலையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

