ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், ஆர்யா, விஷால் நடித்த எனிமி படமும் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தனர். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் பிரபலமான ஒரு தியேட்டரில் எனிமி படத்தின் இரண்டாம் பாதியை முதலில் போட்டிருக்கிறார்கள்.
என்டு கார்டு வந்தபோது தான் அது இரண்டாம் பாதி என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் கத்தி கூச்சலிடவே போலீசாரை வைத்து ரசிகர்களை சமாதானம் படுத்தி இருக்கிறார்கள்.
அந்த தியேட்டரில் நடந்ததை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டாம் பாதியை முதலில் பார்த்தவர்கள், என்னடா படம் இது என்று அந்த வீடியோவில் சொல்வதை பார்க்க முடிகிறது.
என்டு கார்டு வரும் வரைக்குமா இது இரண்டாம் பாதி என்று தெரியாமல் பார்த்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்டதற்கு, ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டதால் கடைசியில் தான் பெயர் எல்லாம் வரும் என்று நினைத்துவிட்டோம் என்று படம் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]