எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு
நேற்று நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் அதே சமயம் மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஒரு கருப்பு போராட்டத்தை நாளை மாலை துவங்க போகிறேன் என்று அறிவித்தார்.
அதன் படி இன்று மாலை தனது வீட்டின் முன்பு ரசிகர்களுடன் தனது போராட்டத்தை துவங்கினார். போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசுகையில், அடுத்த கட்ட போராட்டம் எங்கு எப்போ என்று சொல்ல முடியாது, தடையை மீறி ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் சந்தோசம் தான்.
இங்கு திரண்டு வந்தவர்கள் ரசிகர்களாக வரவில்லை ஒரு தமிழனாக வந்துள்ளனர். இந்த பிரச்சனையால் எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை, என் நாட்டுக்காக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.