தற்போதைய ஊவா மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சபையின் அமைச்சருமான கித்சிறி செனரத் பண்டார அத்தநாயக்க இன்று (29) காலமாகியுள்ளார்.
நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஊயிரிழந்துள்ளார்.
51 வயதுடைய இவர் ஊவா மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினராக கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.