ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கோருவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேர்மையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும் எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக சகலருக்கும் சேறுபூசும் வகையில் ஊடகங்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகநிறுவனங்களின் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டுமெனவும் ரவி கருணாநாயக்க எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், இதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழுத்தமாக கேட்டுக்கொண்டார். ரவியின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர்களிடம் சொத்துவிபரங்களைக் கோரும் அதிகாரம் பத்திரிகை சபைக்கே உள்ளது. தேவையாயின் ஊடகத்துறை அமைச்சுடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என சபாநாயகர் ரவிக்கு மேலும் விளக்கமளித்துள்ளார்.
