இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்தல் நடைபெறும் காலம் முதலான விடயங்களை உள்ளடக்கி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்கள் பெரும்பாலானவற்றின் ஆட்சிக்காலம் முடிவடைந்த போதும், தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்ததால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இதுகுறித்த திருத்தச் சட்டமூலங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் வர்த்தமானி வெளியானதன் பின்னர், தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும்