உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
உள்ளூராட்சிகள் தேர்தல்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள்நடைபெறுகின்ற பாடசாலைகள் டிசம்பர் 9ஆம் திகதிவரை பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
அதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை இருப்பதால் ஜனவரி மாதத்தில்அதனை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கின்றது.

