உலக அழகிப் போட்டியில், 17 ஆண்டுகளின் பின்னர் இந்தியப் பெண்ணான மனுஷி சில்லர் வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) சீனாவின் சான்யா நகரில் இடம்பெற்ற 67ஆவது உலக அழகிப் போட்டியில், இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய மெக்சிகோ, இங்லாந்து, பிரான்ஸ், கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிகளுடன் போட்டியிட்டு, முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர்.
இப் போட்டியில் 118 நாடுகள் போட்டியிட்டன, இதில் 40 அழகிகள் தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து நான்கு நாடுகளை சேர்ந்த பெண்கள் தெரிவாகினர்.
இவர்களில் இந்தியாவின் மனுஷி சில்லர் முதலிடத்தையும், இங்லாந்தின் ஸ்டீபனிஹில்லு இரண்டாம் இடத்தையும், மெக்சிகோவின் ஆண்ரியா எமசா மூன்றாவது இடத்தையும், பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.