ஈராக்கின் மொசுல் நகரிற்கு அருகே இரண்டு புதை குழிகளில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் இடம்பெற தொடங்கியது. ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கு இஸ்லாமிய ஆட்சி என்னும் பெயரில் கடும் அட்டூழியங்களை புரிந்து வந்தனர்.
தற்போது அமெரிக்க இராணுவத்தின் துணையோடு போராடி வரும் ஈராக் இராணுவம் மொசுல் உட்பட ஈராக்கின் பகுதிகளை ஐஎஸ் வசமிருந்து மீட்டெடுத்துள்ளது.
மொசூல் அருகே படவுஸ் நகரில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் இரண்டு சவக்குழிகள் காணப்பட்டன. அதில் ஒன்றில் 470 தலை துண்டிக்கப்பட்ட உடல்களும் மற்றொன்றில் 30 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு ஜூன் 10-ந்தேதி படவுஸ் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.