ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எலிமினேட் ரவுண்டில் மோதுகின்றன. இப்போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறிவிடும் என்பதால் இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும்.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
கொல்கத்தா அணி இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினாலும், சமீபத்திய போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கும் அந்த அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
பேட்டிங் மற்றும் பவுலிங் என தொடர்ந்து மாஸ் காட்டி வரும் நட்சத்திர வீரரான சுனில் நரைன் கொல்கத்தா அணியின் மிகப்பெரும் பலம் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். அதேபோல கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் லின்னும் தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார்.