இஸ்லாமிய குடியரசுகளை அச்சுறுத்தி அந்நாடுகளுக்கான பாதுகாப்பின்மையை உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கமென ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோக் நகரில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் முகமாக ஈரான் தலைநகர் தெஹ்ரேனிலிருந்து புறப்பட்டபோதுது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்நாட்டின் இராணுவ அணிவகுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 12 விஷேட பயிற்சிபெற்ற வீரர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அரேபிய நாடுகளிலுள்ள அரசாங்கத்திற்கு எதிரான அரேபிய இனக்குழுக்களுக்கு அமெரிக்கா, நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவதாகவும் ரௌஹானி அமெரிக்காவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

