இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.
இதேவேளை, கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.