இழந்த பார்வை திரும்ப பெற்ற பிரபல பாடகி! அதிசயம்
இன்று சினிமாவில் குறுகிய காலத்தில் சில பாடல்களை பாடி பலரையும் கவர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. அதிலும் வீரசிவாஜி படத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடலை யாரும் மறக்க முடியாத ஒன்று. இதுவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் இமானுக்கு உண்டு.
சிறு வயதிலிருந்து பார்வை தெரியாத இவர் தனது கேட்கும் திறன் மூலம் இசை கற்றார். ஆனால் பல நாட்களாக அவர் கண்ணிற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
சமீபத்தில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது அவருக்கு கண்பார்வையும் கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.