சீனாவின் கப்பலுடன் முரண்பட்ட சில நாட்களின் பின்னர் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கைக்கு அப்பால் தென்நடுக்கடலில் நிர்க்கதியாக இருந்த இலங்கை மீனவர்களை காப்பாற்றியுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க இணையம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்காடுர் என்ற கப்பலே இலங்கையின் மீனவர்களை காப்பாற்றியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பின்னர் குறித்த மீனவர்கள் இலங்கையின் கப்பல் வரும் வரையில் அமெரிக்க கப்பலில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.