சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
கட்சியின் கொடியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு தொடர்ந்து அன்னைபூபதிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டது மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் மகளீர் அணி தலைவி சிறிகாந்தன் கலைவாணி தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான MA சுமந்திரன், எஸ். சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

