இலங்கை அரசுக்கு பதிலடி கொடுத்த பங்களாதேஷ் அரசு
பங்களாதேஷ் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டு வந்த on arrival கடவுச்சீட்டு நடைமுறையினை இலங்கை அரசாங்கம் தமக்கு அறிவிக்காமல் நிறுத்தியுள்ளதாக பங்களாதேஷ் நாட்டுக்கான வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடவுச்சீட்டு நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையினை அடுத்து, பங்களாதேஷ் விமான நிலையத்தில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் on arrival கடவுச்சீட்டு நடைமுறையினை இடைநிறுத்தியுள்ளதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யசோஜா குணரட்னதை அழைத்து விளக்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமக்கு அதிர்ச்சியளிப்பதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.