Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அர­சால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னை­களை முக­நூல் நிர்­வா­கம் ஏற்­றுக் கொண்­டது

March 16, 2018
in News, Politics, World
0

இலங்கை அர­சால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னை­களை முக­நூல் நிர்­வா­கம் ஏற்­றுக் கொண்­டது. இத­னை­ய­டுத்தே, முக­நூலை இலங்­கை­யில் பார்­வை­யி­டு­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை நீக்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தொலைத் தொடர்­பு­கள் ஒழுங்­கு­ப­டுத்­தும் ஆணைக்
கு­ழு­வுக்கு உத்­த­ர­விட்­டார்.

இது தொடர்­பில் அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள செய்தி அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

அரச தலை­வ­ரின் செய­லர் ஒஸ்­டின் பெர்­னாண்­டோ­வுக்­கும் முக­நூல் நிறு­வன அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டை­யில் நேற்று முற்­ப­கல் அரச தலை­வர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் தீர்­மா­னங்­கள் மற்­றும் உடன்­பா­டு­கள் குறித்து தற்­போது ஜப்­பா­னுக்கு பய­ணம் மேற்­கொண்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கேட்­ட­றிந்­த­தன் பின்­னர் தடையை நீக்­கும் பணிப்­பு­ரையை விடுத்­துள்­ளார்.

கடந்த சில நாள்­க­ளாக தேசிய ஐக்­கி­யத்­திற்­கும், மக்­கள் பாது­காப்­புக்­கும் பாதிப்பு ஏற்­ப­டும் விதத்­தில் கல­வர சூழ்­நிலை பர­வு­வதை தவிர்க்­கும் வகை­யில் சில சமூக ஊட­கங்­க­ளுக்கு பிர­வே­சிப்­ப­தற்கு தற்­கா­லி­க­மாக தடை­வி­திக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­தது.

நில­மையை கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக அமைந்­த­து­டன், மக்­கள் பாது­காப்பு குறித்து உரிய ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு மீண்­டும் பிர­வே­சிப்­ப­தற்­கான வாய்ப்பை அரசு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளது.

அரச தலை­வ­ரின் பணிப்­பு­ரைக்­கேற்ப அரச தலை­வ­ரின் செய­லர் ஒஸ்­டின் பெர்­னாண்­டோ­வி­னால் முக­நூல் சமூக வலை­ய­மைப்­பின் பிர­தி­தி­நி­தி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­லொன்று நடத்­தப்­பட்­டது.

சமூக ஊடக வலை­ய­மைப்பை பிழை­யா­கப் பயன்­ப­டுத்தி இன­வா­தத்­தை­யும் மத­வா­தத்­தை­யும் பரப்பி மக்­கள் வாழ்க்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­தல், மக்­கள் வாழ்க்­கையை சீர்­கு­லைத்­தல் மற்­றும் சில அடிப்­படை வாதி­க­ளி­னால் சமூக ஊடக வலை­ய­மைப்பு துஸ்பிர­யோ­கம் செய்­யப்­ப­டு­வது குறித்­தும் இதன்­போது சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­பட்­டது.

அந்­த­வ­கை­யில் இன­வாத, மத­வாத வெறுப்­புப் பேச்­சுக்­கள் பர­வு­வதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக முறை­மை­க­ளை­யும் நிறு­வ­னக் கட்­ட­மைப்­பை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முக­நூல் அதி­கா­ரி­கள் உடன்­பட்­ட­னர். இதன்­போது அரசு, சிவில் குடி­மக்­கள் அல்­லது குற்­ற­வி­சா­ரணை நிறு­வ­னங்­க­ளி­னால் மேற்­கொள்­ளப்­ப­டும் விட­யங்­கள் தொடர்­பில் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்­க­வும் செயற்­ப­ட­வும் உடன்­பாடு தெரி­விக்­கப்­பட்­டது.

முக­நூல் சமூக ஊட­கத்­தைப் பயன்­ப­டுத்தி வெறுப்­புப் பேச்­சுக்­களை பரப்­பு­வது இலங்கை சட்­டத்­தின் கீழ் குற்­ற­மா­கும் என்­ப­து­டன், அத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக முக­நூல் சமூக உடன்­ப­டிக்­கைக்­கேற்ப செயற்­பட அந்த நிறு­வ­னம் இணக்­கம் தெரி­வித்­தது.

இந்த உடன்­பாடு குறித்து முன்­னேற்ற மீளாய்­வொன்றை உரிய கால இடை­வெ­ளி­யில் இரு­த­ரப்­பிற்­கும் இடை­யில் மேற்­கொள்­வ­தற்­கும் அதற்­கேற்ப மிக­வும் வினைத்­தி­ற­னான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் திட்­ட­மிட்­ட­வ­கை­யில் எதிர்­கா­லத்­தில் செயற்­ப­ட­வும் இரு­த­ரப்­பிற்­கும் இடை­யில் இணக்­கம் காணப்­பட்­டது.

இந்­தத் தற்­கா­லிக சமூக ஊட­கத் தடை கார­ண­மாக சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரி­யங்­கள் குறித்து அரசு கவலை தெரி­வித்­துள்­ளது – என்­றுள்­ளது.

Previous Post

வன்னி விழா : மாபெரும் இசை நிகழ்வு

Next Post

அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்யுமாறு உத்தரவு !!

Next Post

அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்யுமாறு உத்தரவு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures