Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தங்க நகை அடகுக்கடன் தொகை அதிகரிப்பு

November 9, 2020
in News, Politics, World
0

நாட்டில் தங்க நகை அடகுக்கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா தங்கநகை அடகுக் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பொதுமக்கள் இவ்வாறு தங்க நகை அடகுக்கடன் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சில நிறுவனங்கள் ஒரு பவுண் நகைக்கு 57,000 ரூபா முதல் 60,000 ரூபா வரையில் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்கள் ஒரு பவுணுக்கு அடகுக் கடன் தொகையாக 65,000 ரூபா வரையில் வழங்குகின்றன.

மேலும், கடன் அட்டை பயன்படுத்தும் நபர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் அட்டை பயன்படுத்துவோரில் 41 வீதமானவர்கள் முறையாக கடனை செலுத்தத் தவறியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post

கொரோனா ஊரடங்கை மீறிய 3 ஆயிரம் பேர் கைது!

Next Post

தலைமறைவாகிய நபர்: கைது செய்ய 10 குழுக்கள் நியமனம்

Next Post

தலைமறைவாகிய நபர்: கைது செய்ய 10 குழுக்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures