Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது – மனோ கேள்வி

January 6, 2021
in News, Politics, World
0

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?”என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேள்வி எழுப்பினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கனடாவின் ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இந்தச் சபையில் சொன்னார்.

ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் இன்று எங்கே ஐயா தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வந்து அழித்து  முடிக்க முதலில்  இங்கே எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள். பார்ப்போம்…!

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என உங்கள் அரசு சொல்கின்றது. ஆனால், சிறைத்தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கின்றது.  எனினும்,20, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.

இந்த நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கின்றது?

இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? இந்த நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாடு அமைச்சே இல்லை. மக்களைப் பிழையாக வழிநடத்த வேண்டாம். சும்மா, இந்த அரசில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்” – என்றார்.

Previous Post

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

Next Post

நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறப்பு

Next Post

நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures