இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற சித்திரவதை தொடர்பான விடயங்களை சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுக்கள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் 50இற்கும் மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக, எசோசியட் பிரஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாக த நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், வைத்தியர்கள், உளவளவியலாளர்கள், சட்டவாக்குநர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுக்கள் இது தொடர்பான வலியுத்தை முன்வைத்துள்ளன.
இதேவேளை, இலங்கை மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு, சித்திரவதைகளை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதியளித்துள்ளது.