எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சுரக்ஸா என்ற பெயரில் இந்த காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
5 வயது முதல் 19 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கு இந்த காப்புறுதித் திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த காப்புறுதித் திட்டம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் என கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.