யாழ்.சுழிபுரம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் கேரள கஞ்சாவை எடுத்துச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் படையினரால் சோதனையிடப்பட்டது.
சம்பவத்தில் ஒரு கிலோவுக்கு அதிகமான கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

