Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று மழையுடனான வானிலை நிலவும்

December 12, 2020
in News, Politics, World
0

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் மழை வீழ்ச்சி பதிவாகும் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக 2 ஆயிரத்து 131 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வட மாகாணத்தில் 2 ஆயிரத்து 122 குடும்பங் களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 100 பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 4 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு 280 வீடுகள் முழுமையாகச் சேதமடைந் துள்ளன.

அத்துடன் வட மாகாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புகள் பதிவா கியுள்ளன.

இதேவேளை மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 9 குடும்பங்களைச் சேர் ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் – வாசுதேவ

Next Post

‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post

‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures