அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடக குழுவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் மகப்பேற்று, சிறுநீரக, புற்றுநோய் மற்றும் சிறுவர் ஆகிய வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சுதந்திர தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

