இனி நடிகர், நடிகைகள் சம்பளம் இவ்வளவுதான் – தயாரிப்பாளர் சங்கம்
எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை டெலிகாஸ்ட் அடிப்படையில் ஒளிபரப்பப்படும்.
தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களது சம்பளத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதோடு, சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கு விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.