Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனி சாத்­தி­ய­ம் விண்­வெளி சுற்­று­லா

July 16, 2021
in News, World, கட்டுரைகள்
0

விண்­வெ­ளியை தொட்­டு­வி­டுவேன் என்று பாடல்­க­ளிலும் கவி­தை­க­ளிலும் கேட்­டி­ருப்போம் . ஆனால் மனி­தனின் மாபெரும் முயற்­சியால் விண்­வெ­ளியை மனிதன் தொட்­டாலும்  அது விண் வெளி வீரர்­க­ளுக்கு மட்­டுமே  சாத்­தி­ய­மா­னது.

சாதா­ரண மனி­தர்­க­ளுக்கு அது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே இருந்­தது. ஆனால் அதனை சாத்­தி­யப்­ப­டுத்­தி­யு­யள்ளார்  பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் சொந்த பணத்தில் உரு­வாக்­கிய  விண்­கலம் மூலம்.

உலக அளவில்  நிறு­வ­னங்­க­ளுக்கு இடையில் விண்­வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெ­ரிக்­காவை தலை­மை­யி­ட­மாகக் கொண்ட வர்ஜின் கேலக்டிக் நிறு­வனம், தனது விண்­வெளி சுற்­றுலா திட்­டத்­துக்­கான இறு­திக்­கட்ட சோத­னையை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­துள்­ளது.

வர்ஜின் கேலக்டிக் நிறு­வ­னத்தின் யூனிட்டி-22 விண்­கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது. இதில், பல்­வேறு துறை­க­ளிலும் தடம் பதித்­தி­ருக்கும் பிரிட்­டனைச் சேர்ந்த வர்ஜின் என்­கிற பல்­தே­சிய நிறு­வ­னத்தின் நிறு­வனர் ரிச்சர்ட் பிரான்சன்  தனது நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் உட்­பட ஐந்து பேருடன் விண்­வெ­ளிக்குப் பறந்தார். இதில் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த சிரிஷா பன்ட்­லாவும் உள்­ள­டக்கம்.

 

மெக்­சிகோ பாலை­வ­னத்­தி­லி­ருந்து 88 கி.மீ உய­ரம்­வரை சென்று வளைந்து இருக்கும் பூமிப் பந்தை ரசித்­தி­ருக்­கின்­றனர். புவி­ஈர்ப்பு விசை இல்­லாமல் சுமார் நான்கு நிமி­டங்கள் விண்­வெ­ளியில் மிதந்து பின்னர் மீண்டும் தரை இறங்­கி­யி­ருக்­கி­றார்கள் இவர்கள்.

விண்­வெ­ளியின் எல்­லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை பிரான்சன் தனது 71 ஆவது வயதில் நன­வாக்­கிக்­கொண்­டுள்ளார்.

யூனிட்டி விண்­கலம் விமா­னத்தில் இருந்து பிரிந்து, விண்­வெ­ளியை நோக்கி தனி­யாக பறந்­தது. விண்­வெ­ளியை நெருங்­கி­யதும், அங்கு புவி­ஈர்ப்பு விசை சிறிது குறை­வாக உள்ள இடத்தில் விண்­கலம் சிறிது நேரம் மிதந்­த­படி இருந்­தது.

அப்­போது வீரர்கள் விண்­வெளி அனு­ப­வத்தை உணர்ந்து உற்­சா­க­மாக இருந்­தனர். பின்னர் என்­ஜின்கள் எதிர் திசையில் இயக்­கப்­பட்டு, பூமியை நோக்கி விமானம் போன்று தரை­யி­றங்­கி­யது. பூமி­யி­லி­ருந்து சுமார் 85 கிலோ­மீற்றர் உய­ரத்தில் இந்த விண்­கலம் இயங்கி சாதனை படைத்­தது.

பூமிக்குத் திரும்­பிய பின்னர் தனது குழு­வி­னரை வாழ்த்­திய பிரான்சன், “17 ஆண்டு கால கடின உழைப்­பிற்குக் கிடைத்த பல­னாக இது கிடைத்­துள்­ளது” எனப் பெரு­மிதம் அடைந்தார்.

விண்­க­லத்தில் இருந்து வெளியே வந்த குழு­வி­னரை அனை­வரும் வாழ்த்­தினர். அப்­போது பிரான்சன் கூறும்­போது, “இது எனது வாழ்­நாளின் சிறந்த அனு­பவம். மிகவும் உற்­சா­க­மாக உணர்ந்தேன்” என்றார். இனி பணம் இருப்­ப­வர்கள் விண்­வெ­ளிக்கு போக முடியும்… கொரோனா பெருந்­தொற்றால் வீட்டை விட்டு வெளி­யேற முடி­யாமல் இருக்கும் நிலை­யில், விண்­வெளி சுற்­று­லா வர­போ­கின்­றது.

ஆம், விண்­வெளிச் சுற்­றுலா, அதா­வது Space Tourism என்ற திட்­டத்தை முன்­வைத்து அமேசான் நிறு­வ­ன­ரான ஜெப் பெஸோஸின் (Jeff Bezos) ப்ளூ ஒரிஜின் (Blue Origin) நிறு­வ­னமும், ரிச்சர்ட் பிரான்­சனின் வர்ஜின் கேலக்டிக் நிறு­வ­னமும் சில கால­மா­கவே கடு­மை­யாக போட்டிப் போட்டுக் கொண்­டி­ருந்­தன.

இந்த மாதம் 20-ஆம் திகதி ஜெப் பெஸோஸின் ப்ளூ ஒரிஜின் நிறு­வனம் பய­ணி­யர்­க­ளுடன் கூடிய முதல் விண்­வெளிப் பய­ணத்தை மேற்­கொள்ள இருக்­கி­றது. அதற்கு 9 நாட்­க­ளுக்கு முன்பே, விண்­க­லத்தில் விண்­வெ­ளிக்குச் செல்லும் திட்­டத்தைச் செயல்­ப­டுத்தி வெற்றி கண்­டி­ருக்­கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.

சொந்த விண்கலத்தில்  விண்­வெளி பய­ணத்தை நிறைவு செய்த முதல் நப­ரா­கவும், விண்­வெ­ளிக்குச் செல்லும் 70 வயதைக் கடந்த இரண்­டா­வது நபர் என்ற பெரு­மையும் ரிச்சர்ட் பிரான்சனுக்கு கிடைத்­துள்­ள­து.

தனது மனைவி, குழந்­தைகள், பேரக் குழந்­தைகள் உட்­பட 500 பேர் பார்த்து கொண்­டி­ருக்க பிரான்­சனின்  விண்­கலம் பூமி­யி­லி­ருந்து புறப்­பட்­டது. பணக்­கா­ரர்­க­ளுக்கு இடை­யி­லான தனியார் ஸ்பேஸ் டூரிசம் போட்­டியில் வென்­றுள்ள பிரான்­சனை ப்ளூ ஆர்ஜின் நிறு­வன தலைவர் ஜெஃப் பெஸோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SPACEX) நிறு­வனத் தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் வாழ்த்­தினர்.

வர்ஜின் கேலக்டிக் என்ற அவ­ரது நிறு­வனம் உரு­வாக்­கிய யுனிட்டி என்ற  விமானம் தனது ஒன்­றரை மணி நேர விண்­வெளிப் பய­ணத்தை முடித்­துக்­கொண்டு வெற்­றி­க­ர­மாக பூமிக்குத் திரும்­பி­விட்­டது.

புவியின் காட்சி மறை­கிற, வானம் இருண்டு கிடக்­கிற, ஈர்ப்பு விசை மிகவும் குறைந்­துபோய் தானாய் மிதக்­கிற உய­ரத்­துக்கு சென்று திரும்­பி­யி­ருக்­கிறார் பிரான்சன். விண்­வெ­ளிக்குச் செல்லும் தனது விருப்­பத்தை 2004இல் தெரி­வித்தார் பிரான்சன். பல தடை­களைக் கடந்து இப்­போது நன­வா­கி­யி­ருக்­கி­றது அந்தக் கனவு. 2 விமா­னிகள், மூன்று ஊழி­யர்கள் பிரான்­ச­னோடு பறந்­தனர்.

“குழந்தைப் பரு­வத்தில் இருந்தே விண்­வெ­ளிக்கு செல்ல விரும்­பினேன். அடுத்த நூறாண்டில் பல்­லா­யிரம் பேர் விண்­வெ­ளிக்கு செல்ல உதவி செய்­ய­வேண்டும் என்றும் நினைத்தேன்,” என்று தெரி­விக்­கிறார் ரிச்சர்ட். ‘யுனிட்டி’ என்ற அவ­ரது விண்­க­ளத்தை  மிகப்­பெ­ரிய இரண்டு விமா­னங்கள் சுமந்­து­கொண்டு சுமார் 15 கி.மீ. உய­ரத்தை, அதா­வது 50 ஆயிரம் அடி உய­ரத்தை, அடையும் என்றும், அங்கே விமா­னங்கள் கழற்­றிக்­கொள்ள, விண்­க­ளத்தின் மோட்டார் கிளப்­பப்­பட்டு அங்­கி­ருந்து விண்­வெளி நோக்கிப் பயணம் தொடங்கும் என்றும் திட்­ட­மி­டப்­பட்­டது.

60 விநா­டி­க­ளுக்கு அந்த மோட்டார் இயக்­கப்­படும். அப்­போது கீழே பூமி அழ­கான காட்­சியை வழங்கும். அதி­க­பட்­ச­மாக 90 கி.மீ. உய­ரத்தை எட்டும் வகையில் இந்தப் பயணம் வடி­வ­மைக்­கப்­பட்­டது. அதா­வது 2 இலட்­சத்து 95 ஆயிரம் அடி உயரம். உச்­சத்தை அடையும் நிலையில் எடை அற்றுப் போய் விண்­க­ளத்­தி­லேயே ரிச்சர்ட் பறக்கத் தொடங்­குவார் என்­பது திட்டம்.

அதி­க­பட்ச உய­ரத்தை அடைந்­த­பி­றகு அங்­கி­ருந்து அவர் தனது இருக்­கைக்குத் திரும்பி தம்மை பூட்டிக் கொண்டு, கிளைடர் முறையில் பூமியை நோக்கித் திரும்­ப­வேண்டும் என்று திட்­ட­மி­டப்­பட்­டது. ரிச்­சர்டின் வர்ஜின் கேலக்டிக் விண்­வெளிப் பயண நிறு­வ­னத்தைச் சேர்ந்த, பெத் மோசஸ் என்ற பெண் விண்­வெளி வீரர், பிரான்­சனின் பயணம் முழு­வ­தையும் தரையில் இருந்து கட்­டுப்­ப­டுத்தும் வகையில் கட்­ட­ளை­களைப் பிறப்­பித்­துக்­கொண்­டி­ருப்பார் என்று திட்­ட­மி­டப்­பட்­டது.

இதன் படி இந்த பயணம் வெற்­றிப்­பெற்­றுள்­ளது. அடுத்த ஆண்டு பணம் கொடுத்து பறக்க விரும்­பு­கி­ற­வர்­களை இட்டுச் செல்­வ­தற்கு முன்பு இந்த பய­ணத்தை தாம் அனு­ப­வித்துப் பார்க்க விரும்­பி­ய­தாக பிரான்சன் கூறி­யுள்ளார். அமெ­ரிக்­காவின் நியூ மெக்­சி­கோவில் இருந்து இந்தப் பய­ணம்­ஆ­ரம்­ப­மா­னது. யுனிட்டி ஓர் அரை சுற்­று­வட்டப் பயண வாகனம். அதா­வது, புவியை சுற்றி வரு­வ­தற்குத் தேவை­யான திசை­வே­கத்­தையோ, உய­ரத்­தையோ இந்த வாக­னத்தால் அடை­ய­மு­டி­யாது.

கடல் மட்­டத்தில் இருந்து 80 கி.மீ. உய­ரத்தை விண்­வெ­ளியின் விளிம்பு என்று வரை­ய­றுத்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா. பிரான்­சனின் வாகனம் இந்த உய­ரத்தைக் கடந்து சென்று திரும்­பு­வ­தாகத் திட்டம். எனவே, இந்த தனியார் விண்­வெளி பய­ணத்தை விண்­வெ­ளியின் விளிம்­புக்குப் பயணம் என்று பலரும் வரு­ணிக்­கி­றார்கள்.

மேலும் அவ­ருடன் விண்­வெ­ளிக்குச் சென்ற இந்­திய வம்­சா­வளி பெண்­ணான ஸ்ரீஷா பண்ட்லா . கல்­பனா சாவ்லா, சுனிதா வில்­லி­யம்­ஸிற்கு அடுத்­தாக விண்­வெ­ளிக்கு பறந்த மூன்­றா­வது இந்­திய வம்­சா­வளி பெண் ஆகிறார்.

இது­கு­றித்து சிரிஷா பன்ட்லா கூறும்­போது, “விண்­வெ­ளி­யி­லி­ருந்து பூமியைப் பார்ப்­பது நம்ப முடி­யாத அனு­ப­வ­மாக இருந்­தது. வாழ்க்­கையை மாற்றும் சிறப்­பான அனு­ப­வ­மாக இருந்­தது. நான் இப்­போதும் விண்­வெ­ளியில் இருப்­ப­தா­கவே உணர்­கிறேன்.

நான் சிறு­வ­யது முதலே விண்­வெ­ளிக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்­போது உண்­மை­யாகி உள்­ளது” என்றார். சிரிஷா பன்ட்லா ஆந்­தி­ராவின் குண்டூர் மாவட்­டத்தில் பிறந்தார். பின்னர் அமெ­ரிக்­காவின் ஹூஸ்­டனில் பெற்­றோ­ருடன் குடி­யே­றினார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வணிக ரீதியிலான விண்கலங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ரிச்சர்ட் பிரான்சன் 17 வருடங்களுக்கு முன்பு இந்த `வர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தைத் தொடங்கினார். விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் தொழில்ரீதியிலான பயணத்தை மேற்கொள்வதுதான் காலங்காலமாக மரபாக உள்ளது.

ஆனால் இந்த மரபுகளை உடைத்து சாமானியர்களும் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றுவரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ரிச்சர்ட் இதற்கு முன்னோட்டமாகவே இந்த விண்வெளிப்பயணத்தை தனது குழுவுடன் மேற்கொண்டிருக்கிறார். இனி விண் வெளி பயணம் பணம் இருக்கும் அனை­வ­ருக்கும் சாத்­தி­ய­மா­கும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

வாடிவாசல் படத்தின் புதிய அறிவிப்பு…

Next Post

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

Next Post

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures