இலங்கையில் தமிழ் மக்கள், முஸ்லிம்கள் இணைந்து நீண்ட காலத்திற்கு பின் ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
மக்களின் பேரெழிச்சியுடன் நடந்த ஊர்வலம் என்பதால் தடை உத்தரவு இருந்தும் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதன் பின்னணியில் புலி இருக்கிறது என்று அரசு நிரூபித்தால் தான் இது பயங்கரவாதிகளின் திட்டம் என்று அரசால் உலகுக்கு அறிவிக்க முடியும். முஸ்லிம் தமிழ் மக்களின் மீள் ஒற்றுமையை முளையிலே கிள்ளவும் முடியும்.
ஆனால் இந்த ஒற்றுமையை யாரும் தடுக்க முடியாமல் போய்விட்ட்து .
இதனால் இப்போது ஐக்கிய நாடுகள் சபையிலும் சற்று பச்சை விளக்கு எரிய தொடங்கியிருக்கிறது .
இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசியல் வாதிகளும் தமிழ் பேசும் சமூகமும் கசசிதமாக பிடித்து கொள்ளவேண்டும் .
உலகவால் புலம்பெயர் தமிழர்களும் நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நமது நாடும் சமூகமும் பெரிது என எண்ணி காய் கோர்க்க வேண்டிய சந்தர்ப்பம் இதை விட்டால் வேறு இல்லை இப்போதே சிந்தியுங்கள் .

