Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார்- சரத்வீரசேகர

January 10, 2021
in News, Politics, World
0

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என குறிப்பிடடுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தததை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என மேலும் குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம் ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது எனகுறிப்பிட்டுள சரத்வீரசேகர புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும்,இதன் காரணமாக மாகாணசபை முறை மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா

Next Post

4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி

Next Post

4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures