இந்தியா பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹூஸ்டன் நகரில் 22ம் தேதி நடைபெறும் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சில் மோடியை தாம் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக டிரம்ப் கூறியதை நிராகரித்துள்ள இந்திய அரசு, டிரம்ப்புக்கு தமது அறிவிப்பு குறித்து விளக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
															

