இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கான ரஷ்யா தூதராக பதவி வகித்து வந்த அலெக்ஸாண்டர் காடாகின் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும் இந்தியில் சரளமாக பேசும் திறன் மிக்கவராகவும் அறியப்பட்ட கடாகின் மறைவுக்கு பிறகு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார்.
இந்த நிலையில், சுமார் ஏழுமாதங்களுக்கு பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படும் நிகோலே குட்ஷேவ், இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய வெளியுறவு துறை செயலகத்தின் இணை இயக்குநராக பணியாற்றி வரும் நிகோலே குட்ஷேவ், கடந்த 2014-2015 ஆகிய ஆண்டுகள் வரை மைக்ரோனெசியா மற்றும் மார்ஷல் தீவுகளில் ரஷ்ய தூதராக பணியாற்றியுள்ளார்.

