1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் கமல் இரண்டு வேடங்களில் நடிக்க அவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாகவும் அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்து வந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் காஜல்.
அவர் கூறுகையில், இந்தியன்-2 படத்தில் நான் ஒப்பந்தமாகியிருக்கிறேன். கமல்ஹாசனுடன் முதன்முறையாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பட தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.