சிறைச்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 3,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 3,229 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர்களில் 112 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 832 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 829 பேருக்கும் மஹர சிறையில் 785 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் 410 பேருக்கும் நீர்கொழும்பு சிறையில் 271 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு சிறைச்சாலையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியாகிய 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

