Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இணைய தலைமுறையின் காதலை பேசும் கவின்

March 7, 2022
in Cinema, News
0
வைரலாகும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் இன்றைய இளம் தலைமுறையினரின் காதல் மையப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் தயாராகி வரும் முதல் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகரும், பிக் பொஸ் பிரபலமுமான கவின் நடிக்கிறார்.

Bigg Boss Tamil fame Kavin turns nostalgic; read post - Times of India

இவருக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கே. எழில் அரசு  ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

‘மனங்கொத்தி பறவை’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 2k கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல் கதையாகவும், கேளிக்கை அம்சங்களுடன் கூடிய திரைக்கதையாக உருவாகி இருக்கிறது.

இளைய தலைமுறையினரையும், இணைய தலைமுறையினரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் காதல் உணர்வு இந்த திரைக்கதையில் கையாளப்பட்டிருக்கிறது” என்றார்.

Aparna Das role in Thalapathy Vijay's Beast revealed! - Tamil News -  IndiaGlitz.com

‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ‘லிஃப்ட்’ என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் நடிகரான கவின், ‘பீஸ்ட்’ பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்திருப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உக்ரேன் ஜனாதிபதியுடன் உரையாடினார் இந்திய பிரதமர்

Next Post

துர்கா படத்திலிருந்து விலகிய அன்பறிவ்

Next Post
துர்கா படத்திலிருந்து விலகிய அன்பறிவ்

துர்கா படத்திலிருந்து விலகிய அன்பறிவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures