இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெலிகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 29 வயதான நபர் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து களவாடப்பட்ட 06 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய,இந்த நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் இருப்பின் 071 8591753 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் தகவல் தெரிவிக்குமாறு காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

