யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் செயல்பட்ட ஆவா குழுவிற்கு சுவிசர்லாந்தில் உள்ள சிலரே உதவி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
அண்மையில் கைது செய்யப்பட்ட அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பலரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும். சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் ஆவா குழுவுக்கு உதவியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.