திருகோணமலை, தம்பலகாமம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆலயத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக உண்டியலிலுள்ள பணம் எடுக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.