அதிகாலை வேளையிலேயே ஒலிபெருக்கியின் உதவியுடன் பக்திப் பாடல்கள் ஒலிக்கவிடப்படுவதால், அயலில் உள்ளவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும் இரவிலும் வெகு நேரம் வரை இந்தச் செயற்பாடு தொடர்வதால் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாது அவலப்படுகின்றனர்.
நோயாளர்களும், முதியவர்களும், சிறுவயதுப் பாலகர்களும் அமைதியை இழந்து தவிக்கின்றனர்.
வேத மந்திரங்களும், மேளக்கச்சேரிகளும் கூட ஒலிபெருக்கியூடாகப் பெரும் சத்தமாக ஒலிக்க விடப்படுவதையும் காணமுடிகின்றது.
இதனால் ஆலயங்கள் மீது வெறுப்பு ஏற்படுகின்றது. இந்த நிலை உடனடியாக மாற வேண்டும். சகலதையும் ஆலய வளாகத்தினுள் அடக்கிக் கொள்வதே சிறந்தது என மக்கள் வடக்கு ஆலையை பரிபாலகர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்