ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
காபூலின் மேற்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி நோக்கி வந்த கார் ஒன்று மோதி வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலில் 14 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த 145 பேர் அருகில் உள்ள எஸ்திக்லால் மருத்துவமனையில் ((Estiqlal Hospital)) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் சோதனைச் சாவடியின் அருகில் இருந்த ராணுவ பயிற்சிப் பள்ளியைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.