மாணவிகள் மீது பாலியல் வல்லுறுவு கொண்டமைக்காக, ஓர் ஆசிரியரிற்குப் பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில்ஈ அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்று பரிசினை அண்மித்த புறநகர்ப் பகுதியில் நடந்துள்ளது.
Asnières-sur-Seine (92) நகரத்தின் லிசேயில் பயிற்றுவிக்கும் பெண் ஆசிரியரிற்கே இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இவர் தன்னிடம் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களின் மீது, பாலியற் சேட்டைகளிற்காகக் காவற்துறையினரிடம் முறைப்பாடு வழங்கி உள்ளார்.
கடந்த 23ம் திகதி, நடந்த உடற்பயிற்சிக் கல்வியின் பின்னர், இந்தப் பெண் ஆசிரியையைச் சூழ்ந்த ஐந்து மாணவர்கள், அவரின் மீது மோசமான பாலியற் தொடுகைகளைப் புரிந்துள்ளனர்.
இந்த வழக்கைப் பொறுப்பேற்றுள்ள காவற்துறையினர், இந்த மாணவர்களின் மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படால், மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும்.