Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்

November 16, 2017
in Life, News
0
அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்

குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம்.

அந்தத் தியாகம் அவர்களுக்கு எந்தக் கிரீடத்தையும் வைக்கப் போவதில்லை. மாறாக உடல் மற்றும் மனநலத்தில் அவர்கள் காட்டும் அலட்சியம் 40 பிளஸ்சில் பல்வேறு பிரச்னைகளாக உருவெடுக்கலாம்.

பிரச்னை வந்தால் அல்ல… அது தீவிரமானால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்னை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.

6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்னைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

ரத்த குளுக்கோஸ்

போன மாதம் எடுத்த டெஸ்ட்டில் உங்களுக்கு நீரிழிவு இல்லை என வந்திருக்கும். போன மாதம்தானே பார்த்தோம்… அதற்குள் என்னவாகியிருக்கப் போகிறது என்கிற அலட்சியம் வேண்டாம். நீரிழிவு எப்போதும் தாக்கலாம்.

தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்னை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.

கொழுப்புப் பரிசோதனை

லிபிட் புரஃபைல் எனப்படுகிற இதன் மூலம் உடலிலுள்ள நல்ல, கெட்ட கொழுப்பு அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.. மொத்த கொழுப்பின் அளவு, அதில் ஹெச்.டி.எல். எனப்படுகிற நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் எல்.டி.எல். எனப்படுகிற கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைட் எனப்படுகிற கொழுப்பு அமில அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

தைராய்டு

தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.

தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்னை, குறைந்தாலும் பிரச்னை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.

புற்றுநோய் பரிசோதனைகள்

இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே, மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.

இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்ப வாய் புற்றுநோய்க்கே முதலிடம். திருமணமான எல்லா பெண்களும் கட்டாயம் கர்ப்பவாய் புற்று நோய்க்கான பாப் ஸ்மியர் சோதனையைச் செய்து கொள்ள வேண்டும். திருமணமாகாத ஆனால் பாலியல் தொடர்புள்ள பெண்களுக்கும் இந்தச் சோதனை அவசியம்.

சாதாரண புண்ணாகத்தான் அறிகுறி ஆரம்பிக்கும். அலட்சியமாக விட்டால், புற்றுநோயில் போய் நிற்கும்.பிறப்புறுப்புத் திசுக்களை, குச்சி மாதிரியான ஒரு பிரத்யேகக் கருவியின் மூலம் லேசாகச் சுரண்டி செய்யப்படுகிற சோதனை இது. மயக்க மருந்து தேவையில்லை. இரண்டே நிமிடங்களில் செய்து விடலாம்.

ஆஸ்டியோபொரோசிஸ் சோதனை60 பிளஸ் பெண்கள் எலும்புகளின் அடர்த்தியை அறிந்து கொள்ளும் போன் டென்சிட்டி டெஸ்ட்டை மேற்கொள்ள வேண்டும். குடும்பப் பின்னணியில் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மிருதுவாகும் தன்மை இருந்தால் இந்த சோதனை மிக முக்கியம்.

மனநலப் பரிசோதனைமனநலனுக்குச் சோதனையா என்கிறீர்களா? உங்கள் நடத்தையில், உணர்வுகளில் திடீரென மாற்றங்களை உணர்கிறீர்களா? காரணமின்றி கோபம் வரலாம், எரிச்சலாக மாறலாம். யாரைப் பார்த்தாலும் வெறுப்பு ஏற்படலாம். தோல்வி மனப்பான்மை தலைதூக்கலாம். தற்கொலை எண்ணம் வரலாம். வாழ்வதே வீண் எனத் தோன்றலாம். இப்படி எண்ணங்களில் என்ன மாற்றம் வந்தாலும் மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பேசித் தெளிவுபெறுவது நல்லது.

Previous Post

வீட்டுக்காரிடம் தகராறு, பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 குழந்தைகள் பலி

Next Post

இஸ்ரேலின் உதவியை, நிராகரித்த ஈரான்

Next Post

இஸ்ரேலின் உதவியை, நிராகரித்த ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures