யாழ்ப்பாணம் வடமராட்சி- அல்வாய் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெ ற்ற மோதலில் 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அல்வாய் தெற்கில் நேற்றிரவு 11 மணியளவில் இரண்டு வீட்டுக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாததத்தை அடுத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறிய நிலையில், சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் நெல்லியடிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.
எனினும் பொலிஸார் வருவதை கண்ட சிலர் தப்பியோடியுள்ளதுடன், இரத்த காயங்களுடன் அங்கிருந்த 4 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைப் மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் இரத்தக்காயங்களுடன் இருந்த காரணத்தினால் குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஏனைய நால்வரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றதாக மேலும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.