Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

April 23, 2016
in News, World
0

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது. காலநிலை மிகவும் சாதகமாக இருந்ததினால் வழமைக்கு மாறாக பக்தர்கள் அலை அலையாக திரள ஆரம்பித்தனர். பல குருக்கள் அந்தண பெருந்தகைகள் கலந்துகொண்ட விழா என கூறுவதில் பெருமிதம்கொள்கின்றேன். இந்த ஆலயமானது ஒரு கட்டுக்கோப்பான நிர்வாக அமைப்பின் கீழ் இயங்கிவருவதனை நாம் அறிவோம். விழாக்களின் சிறப்பு மற்றும் வல்வை முத்துமாரியம்மனின் சாயலை ஒத்ததாக விழாக்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படுவது வருடாந்த உற்சவத்தின் சிறப்பம்சமாகும். அந்தவகையில் நேற்றைய தினம் சப்பறத் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தேர்த் திருவிழாவும் இனிதே நடந்தேறியது. கூடுதலான பெண் பக்தர்களின் அம்மனின் அருளினை பெறும் பொருட்டு பல்வேறுவிதமான நேர்த்திக்கடன்களை அம்மனின் பாதத்தில் சமர்பித்ததனை காணக்கூடியதாக இருந்தது. வசந்த மண்டப பூஜைகள் சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகியது. மூறு மூர்த்திகள் வசந்த மண்டப பீடத்தில் அமர்ந்திருக்க பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. தீப ஆராதனைகள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக பல்வேறுவிதமான தெய்வீக பாடல்கள் கலந்த இசை அமுதத்தினை வழங்கினார்கள். வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஆலயத்தின் வளர்ச்சியினை பாராட்டி கனடா இந்து சங்கத்தின் சார்பாக ஒரு வாழ்த்துமடல் நிர்வாக தலைவர் திரு ரவிசங்கர் கனகராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல சிறந்த ஆலய முகாமையாளராக கடமைபுரியும் திரு ராஜேஸ்வரன் வைத்தியநாதனுக்கு அவர்களின் சேவையினை பாராட்டி ஒரு வாழ்த்துமடல் வழங்கப்பட்டது. உள்வீதிவலம் வருகின்ற காட்சி பக்தர்களின் கண்களுக்கு இறைபக்தி கலந்த உணர்வினை உருவாக்கி பல பெண் பக்தர்கள் இறைபக்தியின் அதீத உணர்வலைகளினால் தாக்கப்பட்டு அம்பாளின் பாடல்களை உச்சரித்தபடி தங்களை மெய் மறந்து அரோகரா என முழக்கமிட்டவாறு ஆடியதை கவனிக்க முடிந்தது. ஏராளமான ஆன் பக்தர்கள் அங்க பிரதீஷ்டை செய்ததை அவதானிக்க முடிந்தது. மூல மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் சிறப்பான நாதஸ்வர தவில் கச்சேரிகள் நடைபெற்றன. வெளிவீதியில் இரண்டு அழகிய சித்திரத்தேரில் மூலமூர்திகள் அமர்த்தப்பட்டு வெளிவீதி உலாவரும் காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. மொன்றியால் நகரில் இருந்து கூட ஏராளமான அம்மன் பக்தர்கள் வந்திருந்தார்கள். பல தொண்டர்கள் காலநிலையின் நிமித்தம் தாக சாந்தி செய்ததினை அவதானிக்க முடிந்தது. சிறுவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரியவர்களுடன் சேர்ந்து வடம் இழுத்ததினை அவதானிக்க முடிந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை அம்ம்பாளிடம் செலுத்துவதற்காக கற்பூரசட்டி ஏந்தி தங்களது காநிக்கையினை செலுத்தினார்கள். பல பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். விழாவின் இறுதியில் தாராள அன்னதானம் வழங்கப்பட்டது. வீதி எங்கும் பந்தல்கள் அமைத்து மண்டகப்படி உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Langes, FCPA, FCGA
easynews latestnews
easy24news.com
Canada Hindu Temple Association

Previous Post

திருகோணமலை தமிழர்களின் தமிழ்த் தாயகம். அங்கிருந்து அசைந்துவரும் அழகிய சித்திரத் தேர் . தமிழர்களின் கலை மற்றும் அடையாளம் என்றும் அழியாது.

Next Post

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

Next Post

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்துகொண்ட சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures