சுற்றுலா சென்ற அரபுக் கல்லூரி மாணவர்களில் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிதனால், நேற்று (15) முற்பகல் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்களே இவ்வாறு சுற்றுலா சென்றுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு மாணவர்களின் ஜனாஸாக்களும் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்