தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான முடிவை எட்டுவதற்கு முன்னர் அனைத்து விடயமும் கருத்திற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டதற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும் என்றும் இந்த விடயத்தில் அவர் பொருத்தமான முடிவை எட்டினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை எட்டுவதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை கூடி ஆராயும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

