நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அரசியலமைப்புச் சபை சட்டவிரோதமானது என்பதனால், அச்சபையினால் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால புதிய அரசியல் யாப்பு அறிக்கையும் செல்லுபடியற்றது.
சபாநாயகர் இந்த அறிக்கையை நிராகரிக்காதுவிடின், இது குறித்து எதிர்காலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டி வரும்” என விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.