பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (07) நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த வேண்டுகோளை பிரதமரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.