பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.
மேக் தொன்பரி, கேரோல் சீ போட்டர், விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் அத்துல் கேஷாப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.